சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ...!!!

சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ...!!!

Published on

அம்பத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் தனியார் இஸ்லாமிய பள்ளியின் பேருந்து வழக்கம் போல் மாணவர்களை ஏற்றிக் கொண்டு அம்பத்தூர் வழியாக வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது அம்பத்தூர் பாடி மேம்பாலம் அருகே சென்றபோது அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்பகுதியில் திடீரென அதிக அளவில் புகை வந்துள்ளது.  

இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு வாகனத்தில் பரவத் துவங்கிய லேசான தீயினை அணைக்க முற்பட்டார்.  அப்போது அவ்வழியாக வந்த டேங்கர் லாரியில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி துரிதமாக செயல்பட்டு வாகன ஓட்டிகள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வில்லிவாக்கம் தீயணைப்பு துறை வீரர்கள் வாகனத்தில் எழுந்த புகையை அனைத்து கட்டுப்படுத்தினர்.  இந்த விபத்தில் வாகனத்தில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.  இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com