இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு..!

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து ஆராய குழு..!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய 3 பேர் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரச்சினைக்கு தீர்வு காண குழு அமைக்கப்படும் என அரசு தெரிவித்தது.

அதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.