6 மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; வானிலை ஆய்வு மையம் ...

 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ; வானிலை ஆய்வு மையம் ...

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் :

முன்னதாக இன்றைய தினம் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.அதனை தொடர்ந்து மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கி.மீ., நெல்லூருக்கு தென்கிழக்கே 210 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து 340 கி.மீ. தெற்கு-தென்கிழக்கே தற்போது நிலை கொண்டுள்ளது. 

மேலும் தெரிந்து கொள்ள /// இப்போ வருமோ எப்போ வருமோ...! பொறுமையை இழக்க வைக்கும் மழை..! தமிழ்நாடு வெதர் மேன் ட்வீட்..!

இன்னும் 6 மணி நேரம் தான் : 

மேலும் தெரிந்து கொள்ள /// குறைந்தது பருவமழை.. தொடங்கியது கடும் பனி.. கோவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! 

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.