வேளாண் பட்ஜெட்2023: மல்லிகை இயக்கத்துடன் அறிவிக்கப்பட்ட பல முக்கிய இயக்கங்கள்...!!

வேளாண் பட்ஜெட்2023:  மல்லிகை இயக்கத்துடன் அறிவிக்கப்பட்ட பல முக்கிய இயக்கங்கள்...!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.  சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

மல்லிகை இயக்கம்: 

ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா இயக்கம்: 

கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா ஆராய்ச்சி: 

பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலாவைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மிளகாய் மண்டலம்: 

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கை இயக்கம்: 

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மரபுசார் நெல் ரகங்கள்: 

தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

அதிக மகசூல்:

குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

கழிவிலிருந்து:

சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

இதையும் படிக்க:   வேளாண் பட்ஜெட்2023: முக்கியத் திட்டங்கள்...!!