வாக்கு சேகரிப்பின் போது...இரட்டை இலை சின்னத்தை காட்டிய குழந்தை...!

வாக்கு சேகரிப்பின் போது...இரட்டை இலை சின்னத்தை காட்டிய குழந்தை...!
Published on: 
Updated on: 
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து  எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இரு தரப்பினரும் தங்களது வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, பொன்னையன், கேவி ராமலிங்கம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசுவை ஆதரித்து  இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, வீரப்பன் சத்திரம் பிரதான சாலை, சாந்தாங்காடு, கிருஷ்ணசாமி வீதி உள்ளிட்ட இடங்களில்  வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துண்டு பிரசுரங்களாக வழங்கி கே எஸ் தென்னரசுக்கு ஆதரவு திரட்டினர்.  இதேபோல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாடியில் நின்றிருந்த இரண்டு வயது குழந்தை இரட்டை இலை சின்னத்தை கையால் காட்டியது அதிமுகவினரை உற்சாகமடையச் செய்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com