அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!

அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!

அதிமுக பொதுக்குழு தீர்னங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், இதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த வாதத்தின்போது தங்கள் தரப்பு கருத்தையும் கேட்டுக் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | ”அமைச்சர் பொன்முடி எங்களை அவமதிக்கவில்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி