அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.... ஓபிஎஸ் அணி வழக்கு!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.... ஓபிஎஸ் அணி வழக்கு!!!
Published on: 
Updated on: 
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி ஓபிஎஸ் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

மனு தாக்கல்:

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.  இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு:

அந்த மனுக்களில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு,  சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.  மேலும் கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com