
தமிழ்நாடு அரசின் தானியங்கி ஏடிஎம் மதுபான விற்பனை திட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி ஏடிஎம் மதுபான விற்பனை திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மால்களில் தானியங்கி எந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்வது என்ன மாதிரியான சோதனை என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விஷயத்தில் மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், கலாசாரம் மற்றும் பண்பாடு என எதையும் கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு தான்தோன்றித் தனமாக செயல்படுவது வெட்கக் கேடானது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.