400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் ராணா!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா நிவாராண நிதி வழங்கியுள்ளார்.

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் ராணா!!

கொரோனாவின் முதல் அலையில் யாரென்றே அறியாதவர்கள் மறைய, இரண்டாவது அலையில் சிக்கி நம்மை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவதையே பார்த்து வருகிறோம். இதில் மூன்றாம் அலை காத்திருப்பதாக தகவல் வேறு. இந்த இக்கட்டான சூழலில் பலரும் பசியில் வாட, பல தரப்பினர் களத்தில் இறங்கி இயலாதோருக்கு உதவி வருகின்றனர். பலர் அரசு மூலமாக தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

நடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்ற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, படப்பிடிப்பின்போது அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால், அவர்களின் தேவையறிந்து இந்த உதவியை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.