பாஜகவில் இருந்து நடிகை கவுதமி திடீர் விலகல்... மன உளைச்சலுக்கு உள்ளாக்கினாரா மூத்த தலைவர்?

பாஜகவில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

திடீரென பாஜகவின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் பாஜக தலைமைக்கு எழுதியுள்ளர்.

அதில் 25 வருடமாக பாஜகவில் பணியாற்றி வரும்  தனது வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கட்டத்தில் நிற்பதாகவும், ஆனால் கட்சி தலைவர்களிடம் இருந்து தனக்கு எந்த ஆதரவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவரை நம்பி ஒப்படைத்த  சொத்துக்களை, பணத்தை  ஏமாற்றிவிட்டதகாவும் கவுதமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளாதாகவும், தனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 25 வருடங்கள் பாஜகவுக்கு  விசுவாசமாக இருந்தும், முழுமையான ஆதரவு இல்லாததையும், மேலும் பாஜகவின் பல மூத்த உறுப்பினர்கள் அழகப்பன் பற்றி உணர்ந்தும் அமைதியாக இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் கவுதமி கூறியுள்ளார்.

அதனால்  பாஜகவில் இருந்து  ராஜினாமா செய்வதாக  அந்த கடிதத்தில் நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார்.