
ரயில் பெட்டிக்கும் பிளாட்பார்முக்கும் இடையே கால் மாட்டிக்கொண்டதால் கால் முழுவதும் பாதிப்படைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராணுவ வீரர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை தொட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(34) என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு வருவதற்காக சம்பர்கிராந்தி எக்ஸ்பிரசில் வந்துள்ளார்.
நேற்று இரவு 10:30 மணி அளவில் ரயில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த போது இவர் தனது பெட்டியை விட்டு இறங்கி பிளாட்பார்மில் நின்றுள்ளார்.
பின்னர், ரயில் புறப்பட தயாரானதும் ஓடிச் சென்று தனது பெட்டியில் ஏற முற்பட்டபோது பிளாட்ஃபார்முக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே இவரது கால் மாட்டிக் கொண்டது. உடனடியாக ரயிலை நிறுத்தி ராஜேஷ் குமாரை மீட்ட ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கால் முழுவதும் பாதிப்படைந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர்.