68 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா சவுண்டிங் லேப்ராஸ்கோப்பிங்... மா. சுப்பிரமணியன்!!

68 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா சவுண்டிங் லேப்ராஸ்கோப்பிங்... மா. சுப்பிரமணியன்!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உபகரணங்கள்:

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள்  அரசு மருத்துவமனையில் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் ஆர்ச்  சிட்டி சார்பில் 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கேற்றோர்:

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ராஜிவ்காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் தேரனிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரோட்டரி சங்கம்:

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா சுப்பிரமணியன், ரோட்டரி சங்கம் மருத்துவ கட்டமைப்புகளுக்கு  பேருதவி அளித்து வருகிறது எனவும் போலியோ நோய் ஒழிப்புக்கு ரோட்டரியின் பங்களிப்பு முக்கியமானது எனவும் தெரிவித்த அவர் பேரிடர் காலத்தில் ஆக்ஸிஜன் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய உறுதுணையாக இருந்தது எனக் கூறினார்.

அல்ட்ரா சவுண்டிங் லேப்ராஸ்கோப்பிங்:

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்து அவை இன்று சிறந்த வகையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது எனவும் ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பாக பயன்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.  அதனோடு 68 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா சவுண்டிங் லேப்ராஸ்கோப்பிங் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை எழும்பூர்  அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

குறைந்த பாதிப்பு:

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 510 வரை இருந்த்து எனவும் தற்போது 3 நாட்களாக குறைந்து  424 ஆக இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் பதிப்பு 7000 ஆக குறைந்திருக்கிறது எனவும் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை எனவும் கூறிய அமைச்சர் 5-6 நாட்கள் தனிமை படுத்திக்கொண்டால் போதுமானது எனவும் தெரிவித்தார்.  

மேலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் மிதமான தொற்று என்கின்ற வகையில் இருந்து வருவதாகவும் அதிதீவிர சிகிச்சையோ ஆக்சிஜனோ தேவைப்படாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com