திமுகவில் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து ஆலோசனை?

திமுகவில் துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து ஆலோசனை?

திமுக உயா்நிலை செயல்திட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சா் பொறுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : பப்புவா நியூ கினியா ”தீவு அல்ல; மிகப்பெரிய கடல் நாடு” - இந்திய - பசிபிக் தீவுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

தொடர்ந்து, கூட்டத்தில் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து கட்சி ரீதியாக முடிவெடுக்க ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமைச்சா்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.