வேளாண் பட்ஜெட்2023: முக்கிய அறிவிப்புகள்...!!!

வேளாண் பட்ஜெட்2023:  முக்கிய அறிவிப்புகள்...!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.    சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

அதற்கு முன்னதாக சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாந்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்.

முக்கிய அம்சங்கள்:

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அமைச்சர் பல முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் அறிவித்து வருகிறார். 

  1. 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம்.   தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.

  2. கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.  இதற்காக  2504 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.   இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள்.

  3. நெல் அறுவடைக்கு பின்னரான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம்.  

  4. 60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு.

  5. அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை.

  6. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்.

  7. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்கள்.

  8. பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

  9. ஆதிதிராவிட, பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

இதையும் படிக்க:    1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை ....!!!