பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு குவிக்கப்படும் போலீஸ் படைகள்...

மானாமதுரை ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு குவிக்கப்படும் போலீஸ் படைகள்...

மானாமதுரை டிச 04 நாடு முழுவதும் டிசம்பர் 6 ஐ முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலைய சந்திப்பு தென்னக ரயில்வேயில் முக்கியமான சந்திப்பாகும்.

ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மானாமதுரையில் எரிபொருள், தண்ணீர் நிரப்பிய பிறகே ராமேஸ்வரம் செல்லும் , பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள்...

ரயில் நிலையம், வைகை ஆற்றில் உள்ள ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே போலீசாரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். மானாமதுரை வரும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு பயணிகளின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ சவுந்தரபாண்டியன் தலைமையில் போலீசார் சரவணன், வினோத், ராஜா, உள்ளிட்ட பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே நிலைய நுழைவு வாயிலில் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பெரிய கார்த்திகைக்காக பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு...