அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம்...!

அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணம்...!
Published on
Updated on
1 min read

அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம்  அரசு தலைமை மருத்துவமனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கழிவறையுடன் கூடிய காத்திருப்போர் அறையை அமைச்சர் பொன்முடி  திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு இருந்த முதலமைச்சர்கள் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு பணி செய்தார்கள், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து பணி செய்து வருவதாகவும் கூறினார்.  

தொடர்ந்து கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பொறுத்தவரையில் எங்கேயும் ஆடியோவாக ஒலிப்பரப்ப கூடாது எனவும், எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் வாய்மொழி வழியாகவே பாட வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவிட்டு நடைமுறைபடுத்தினார். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாடல், கர்நாடகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒலித்தபோது, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரய்யா தமிழ்தாய் வாழ்த்தினை நிறுத்த கூறியது ஏற்கதக்கது அல்ல, மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ் மட்டுமல்ல அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணம் எனவும், நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல; எந்த மொழிகளும் திணிக்கப்பட கூடாது சமமாக கருதவேண்டும் என்ற அடிப்படையில் தான் அதனை கண்டித்து இருப்பதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com