12 மணி நேர சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மே 12 இல் வேலை நிறுத்தம்

12 மணி நேர சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மே 12 இல் வேலை நிறுத்தம்

தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை என்ற உரிமையை பறிக்கும் விதமாக கடந்த 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த சட்டங்கள் ஏற்றுவதற்கு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் நிராகரிக்கப்பட்ட சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது

தமிழ்நாடு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழக அரசின் 12 மணிநேர சட்ட திருத்தத்திற்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதன் பிறராக அனைத்து தொழிற்சங்கங்களின் மாநில தலைவர் எம் ராதாகிருஷ்ணன் மாலை முரசு களித்த பிரத்யேக பேட்டியில் அனைத்து தொழிற்சங்கங்களும் மே 12-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார் 

இது குறித்து அவர் மேலும் பேசுகையில்:

இந்த சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னால் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசவில்லை. ஆகவே தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றது . ஒரு நாளில் எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர உறக்கம் எட்டு மணி நேர ஓய்வு என்பது அறிவியல் பூர்வமாக மனிதனின் ஆரோக்கியத்தின் தொடர்புடையது. ஆனால் இவற்றை நீர்த்துப் போக்கும் வகையில் முதலாளிகள் விரும்புகிறார்கள் என்பதற்காக முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த மாதிரியான நடவடிக்கை ஏற்புடையது அல்ல 


ஐரோப்பிய போன்ற நாடுகளில் 7 மணி நேரம் வேலை என்பது அமலில் உள்ளது அதை ஆறு மணி நேரம் வேலை ஆக குறைக்க வேண்டும் என்பதை திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முன் வைத்தார்  இப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மனித வளம் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் நடவடிக்கையாக தான் தொழிற்சங்கங்கள் இந்து சட்ட மசோதாவை பார்க்கின்றன

ஆகவே வருகின்ற மே 12ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அரசின் சார்பில் நடத்தப்படும் தொழிற்சங்க உங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவை விளக்குவதற்காக மட்டுமே  கூட்டம் உள்ளது . இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக 12 மணி நேர சட்ட திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க | அதிமுகவின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு சட்ட தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என்றும் அதற்கான விதிகளை  உருவாக்க மாட்டோம் என்று தமிழக அரசு நிலைப்பாடு அளிக்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக 26 ஆம் தேதி அனைத்து ஆலைகளிலும் ஆலை வாயில் கூட்டமும் 27 ஆம் தேதி போராட்டம் குறித்த நோட்டீசும் வழங்கப்படும் 28 ம் தேதி உணவகங்களில் மதிய உணவு புறக்கணிப்போம் கருப்பு பட்டை அணிந்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மே ஒன்பதாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து மே பன்னிரண்டாம் தேதி வேலை நிறுத்த போராட்டமும் நடைபெறும். எம் ராதாகிருஷ்ணன்  (AITUC மாநில செயலாளர்) தெரிவித்தார்.