ஆராய்ச்சி திறமைகளை மேம்படுத்த ரூ.12கோடி ஒதுக்கீடு...!

ஆராய்ச்சி திறமைகளை மேம்படுத்த ரூ.12கோடி ஒதுக்கீடு...!

ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

இந்த திட்டம் மூலம், அடுத்த 3 ஆண்டில் 100 மாணவர்களுக்கு கலை, சமூக அறிவியல், மானுடவியல் துறைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இதையும் படிக்க : ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு...? 3 ஆம் சுற்றின் நிலவரம்...

இந்நிலையில் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.