200க்கும் மேற்பட்ட மாணவிகளை அந்தரங்க **** பாபா!! சொல்ல வார்த்தையே இல்ல... எகிறும் கிரைம் ரேட்!!

பள்ளியில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு தகுந்த பதில் கிடைக்க வேண்டும் என சுஷில் ஹரி இண்டர்நேஷனல் முன்னாள் மாணவியான அமிர்தா போராடி வருகிறார். 

200க்கும் மேற்பட்ட மாணவிகளை அந்தரங்க **** பாபா!!  சொல்ல வார்த்தையே இல்ல...  எகிறும் கிரைம் ரேட்!!

பள்ளியில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு தகுந்த பதில் கிடைக்க வேண்டும் என சுஷில் ஹரி இண்டர்நேஷனல் முன்னாள் மாணவியான அமிர்தா போராடி வருகிறார். 

பள்ளிகளுக்கு படிக்க வரும் பிள்ளைகளிடம் பாடம் நடத்தும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவது வேதனைக்குரிய செயலாக உள்ளது. அண்மையில் சென்னையில் பிரபல பள்ளிகளில் ஒன்றான பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பலரிடம் தனது காம இச்சையினால் பாலியல் தொந்த்ரவு கொடுத்து வந்துள்ளார் என்ற செய்தி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாடத்தில் மதிப்பெண்கள் வேண்டுமென்றே குறைக்கப்படும் அல்லது வேறு மாதிரியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதனால் பெரும்பாலான மாணவிகள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியே சொல்ல தயங்குகின்றனர்.

இதேபோன்று, ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் போதிக்கிறேன் என்ற பெயரில் பள்ளியை நடத்தி வந்த சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது. கேளம்பாக்கத்தில் இருக்கும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா என்பவர் அவரது பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இது பூதாகரமாக வெளிவந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி படிக்கும் போது பாடம் நடத்தும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவிகளை திரட்டி அவர்களுக்காக நியாயம் கிடைக்க போராடி வருகிறார் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவியான அமிர்தா.

இதுகுறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், கடந்த 2009-11 ஆண்டு வரை அப்பள்ளியில் படித்து வந்த அமிர்தா, சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் நடக்கும் சில கூத்துகள் குறித்து தெரிவித்தார். அதாவது, அப்பள்ளியில், சிவசங்கர் பாபாவின் பக்தர்களாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், பாபாவின் பக்தர்களாக இல்லாவிட்டால் வேறு மாதிரியாகவும் நடத்துவார்கள் என்றார். பாபாவால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தகவல்களை பெற்று அதை வெளியே சொன்னதால் தன்னை ப்ளஸ் ஒன் படிக்கும் போதே டி.சி கொடுத்து வெளியே அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார் அமிர்தா. மேலும் பள்ளியில் படிக்கும் பலர் ஏழை, எளியவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் யாரும் எங்கு சென்றும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் தன்னை கடவுள் என சொல்லிக்கொள்ளும் சிவசங்கர் பாபா.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் நடைபெறும் பாலியல் புகார்கள் குறித்து வரும் 11-ம் தேதி சிவசங்கர் பாபாவை குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரிக்கவுள்ளது. இந்த விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய பதில் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக முன்னாள் மாணவி அமிர்தா கூறியுள்ளார்.