"எந்த புரிதலும் இல்லாமல் குறையில்லா ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக்கொள்ளும் முதல்வர்" அன்புமணி கண்டனம்!!

"எந்த புரிதலும் இல்லாமல் குறையில்லா ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக்கொள்ளும் முதல்வர்" அன்புமணி கண்டனம்!!

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன.

இதனை கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக இன்று பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி. தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு நிறுவனம் என்றும் அதற்காக விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவிதுள்ளார்.

மேலும் இதற்கு எதிரான முதல் கண்டனக் குரல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தெரிவித்திருக்க வேண்டும் எனவும்,  ஆனால் அவர் எந்த புரிதலும் இல்லாமல், மக்களுக்கு, குறை சொல்ல முடியாத ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக் கொண்டிருப்பதாகவும் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.