அறிவிப்பு வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்...!!!

அறிவிப்பு வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்...!!!

தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான Tancet - 2023 தேர்வு மற்றும் எம்.இ, எ.டெக், எம். ஆர்க்,எம்.ப்ளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான CETTA - PG தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் சென்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TANCET தேர்வு வருகிற 25ஆம் தேதியும் CEETA - PG தேர்வு 26 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.  இந்த தேர்வினை 39,249 மாணவர்கள் எழுத உள்ளனர்.  இதற்காக 40 தேர்வு மையங்கள் 15 நகரங்களில் அமைக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   இசைக்கும் வரியா.... ஜி.வி.க்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி ஆணையர்!!!