"உண்மையைப் பேசிய பி.டி.ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்"  அண்ணாமலை விமர்சனம்!!

"உண்மையைப் பேசிய பி.டி.ஆர்-க்கு அமைச்சரவை மாற்றம்"  அண்ணாமலை விமர்சனம்!!
Published on
Updated on
1 min read

உண்மையைப் பேசியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கிடைத்த பரிசு தான் அமைச்சரவை மாற்றம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இன்றைய பயணம் மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

காவிரி விவகாரத்தில் திமுக எந்தவொரு சாதகமான முடிவுக்கும் ஒத்துவரவில்லை எனவும் உண்மையைப் பேசியதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை, பாஜக மேலிடத்துடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com