ஊடகவியலாளரின்  நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை.... வேல்முருகன்!!!

ஊடகவியலாளரின்  நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை.... வேல்முருகன்!!!

ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று கூறி அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டு ஊடகவியலாளர்களின் நேரத்தை வீணடித்துள்ளார் எனவும் ஐபிஎஸ் படித்த நபர் இவ்வளவு நாட்கள் புருடா விட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தீர்மானங்கள்:

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை தனியார்  மஹாலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சிறப்பு தீர்மானங்கள் போடப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்களாக,

  • தமிழ்நாட்டின் சாதி வரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

  • வன்னியர் மக்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டில் நடைமுறையில் நடத்தப்பட்ட உச்சநீதிமன்றம் கொடுத்த ஆலோசனைகளை ஏற்று போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஊழல்:

இந்த நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் பேட்டி அளிக்கையில் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வெளியிட்ட சொத்து பட்டியலை அண்ணாமலை தற்போது காப்பியடித்து டவுன்லோட் செய்து அதனை வெளியிட்டுள்ளார் எனவும் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியல் குறித்து வெளியிட்டு இருந்தால் அதற்கு கருத்து கூறலாம் எனக் கூறிய வேல்முருகன் ஆனால் ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் சொத்து பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

வீணடிக்கும் அண்ணாமலை:

அதனை தற்போது டவுன்லோட் பண்ணி எடுத்து வந்து ஊடகவியலாளரின் நேரத்தை வீணடித்துள்ளார் எனவும் மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஊழல் செய்திருந்தால் ஊழல் பட்டியலை ஆதாரமாக ஊடகத்திற்கு வெளியிடலாம் எனவும் ஆனால் ஐபிஎஸ் படித்த நபர் அண்ணாமலை இத்தனை நாட்கள் ஊழல் பட்டியலை வேண்டுகிறேன் என புருடா விட்டுக் கொண்டிருக்கிறார் எனப் பேசினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com