எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Published on

சென்னை  எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறை கடல் அரிப்பு தடுப்பு உதவி செயற்பொறியாளர்  அலுவலகத்தில்  விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை  சேப்பாக்கம் பகுதியில் உள்ள எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளராக பாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக இவர் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீர்வளத்துறை  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.  

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 14ஆயிரத்து 540 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பணத்திற்கு உண்டான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com