மகளிர் உரிமைத் தொகை : நாளை முதல் வீடு தோறும் டோக்கன் விநியோகம் !

மகளிர் உரிமைத் தொகை : நாளை முதல் வீடு தோறும் டோக்கன் விநியோகம் !

Published on

மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் நாளைமுதல், தெரு வாரியாக விநியோகிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் நாளை தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் நாளைமுதல், இரண்டு கட்டங்களாக தெரு வாரியாக, வீடுதோறும் விநியோகிகப்படும் என்றும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினார். அத்துடன், இது குறித்த தகவல்கள் ரேஷன் கடைகளில் வெளிப்படையாக ஒட்டப்படும் என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com