சட்டப்பிரிவு 110...! காவல்துறைக்கு மீண்டும் அதிகாரம் பெற சட்ட திருத்தம்...! 

சட்டப்பிரிவு 110...! காவல்துறைக்கு மீண்டும் அதிகாரம் பெற சட்ட திருத்தம்...! 
Published on
Updated on
1 min read

சட்டப்பிரிவு 110ன் கீழ் பிணை பத்திர உறுதி மொழியை மீறினால் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு நீக்கப்பட்டதை தொடர்ந்து சட்ட திருத்தம் கொண்டுவதற்கான முயற்சியில் காவல்துறையினர ஈடுபட்டு வருகின்றனர்.

நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறுபவர்களை சிறையில் அடைக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் நீக்கி உள்ள நிலையில் இதனை மீண்டும் கொண்டு வரும் வகையில் தமிழக காவல்துறை தமிழக அரசுக்கு விரிவான அறிக்கையை தயார் செய்து வருகின்றது. தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களிடம் ஒரு வருடத்திற்கு எந்த விதமான குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110  ன் அடிப்படையில் பெற்று அவர்களை கண்காணித்து வருவதாக காவல்துறையினர். உறுதிமொழி பத்திரத்தை குற்றவாளிகள் மீறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110 ன் விதியின்படி எஸ்பி மற்றும் துணை ஆணையரின் தாசில்தாரின் அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்து தண்டனை வழங்கி வந்தனர்.

2013 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த அரசாணையில் மாவட்ட எஸ்பி மற்றும் துணை ஆணையருக்கு இந்த அதிகாரத்தை வழங்கி வெளியிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்பி மற்றும் துணை ஆணையர்களுக்கான இந்த அதிகாரத்தை நீக்குவதாக உத்தரவிட்டது. இந்த அதிகாரத்தை நீக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் பெருகுவதற்கும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் அதேபோல கடந்த கால கட்டத்தில் எவ்வளவு குற்றவாளிகள் இந்த 110 விதியின் கீழ் பிணை பத்திரம் கொடுத்து இருக்கிறார்கள் என்ற விவரங்களுடன் தமிழக அரசுக்கு தமிழக காவல்துறை விரிவான அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். 

இதன் மூலமாக தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டுவதற்கான முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com