கலைஞர் நூற்றாண்டு நூலகம்; இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டு நூலகம்; இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.

மதுரையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அரசு மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கவுள்ளாா். அதற்காக அவா் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். பின்னா் அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞா் நூலகம் மற்றும் அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறாா். பின்னா் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் அவா் இரவு மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் மதுரைக்கு வருகை தரவுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக மதுரை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சா்வதேச தரத்தில் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் திறப்பு விழா தயாா் நிலையில் உள்ளது. மேலும் முதலமைச்சா் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

இதையும் படிக்க:"இந்திய நாட்டின் கூட்டாண்மை உலக நன்மைக்கான சக்தி" மோடி பெருமிதம்!