"எதிர்குரல்களை நசுக்க நினைக்கும் முயற்சி நீண்டநாள் செல்லாது" அண்ணாமலை டிவீட்!

"எதிர்குரல்களை நசுக்க நினைக்கும் முயற்சி நீண்டநாள் செல்லாது" அண்ணாமலை டிவீட்!

பா.ஜ.க. மாநில செயலாளர் சூர்யா இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக மாநில செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ள திறனற்ற திமுக அரசு, எதிர் கருத்துகள் கூறுபவர்களின் குரலை முடக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் போன்று தங்களை காட்டிக் கொண்டு, எதிர் குரல்களை நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்கு செல்லாது என்பதை அறிவாலயம் நினைவில் கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ள அவர், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்றும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பாஜக மாநில செயலாளர் சூர்யா மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.