” பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும் “ - எல்.முருகன்.

” பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும் “  - எல்.முருகன்.
Published on
Updated on
1 min read

2024 நாடாளுமன்ற தேர்தலில்  400க்கும் மேற்பட்ட தொகுதியில் பிடித்து மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வருவார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோயிலில் மற்றும்  ஓடந்துறை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மத்திய அரசின் ஒன்பதாண்டுகால சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல். முருகன் பாட்னாவில் எதிர்கட்சிகள் நடத்திய கூட்டம் 'ஜோக் கூட்டம்' என விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே போல எதிர்கட்சிகளின் கூட்டம் நடத்தினர் இருந்தாலும் மக்கள் பி. ஜே. பிக்கே வாக்களித்தனர். அதேபோல தான் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில்  400க்கும் மேற்பட்ட தொகுதியில் பிடித்து மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வருவார் என கூறினார்.

மேலும், மத்திய அரசு கொண்டுவந்த ஜல்ஜீவன் திட்டம் நாட்டு மக்களுக்கான மகத்தான திட்டம் என கூறிய அவர் இந்த திட்டம் ஏழை மக்களுக்கான மகத்தான திட்டமாக வெற்றியை பெற்றுள்ளதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ளதால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையெனில் அவரை தமிழக முதல்வர் அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com