பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா -அண்ணாமலை திடீர் சந்திப்பு!

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா -அண்ணாமலை திடீர் சந்திப்பு!
Published on
Updated on
1 min read

டெல்லியில் அகில இந்திய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துள்ளார். 

ஒரு நாள் பயணமாக இன்று காலை திடீரென சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க.‌மாநில தலைவர் அண்ணாமலை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி‌.நட்டாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரம், ஆளுநர் தமிழக அரசு மோதல் விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம், தி.மு.க‌ கோப்புகள் இரண்டு வெளியீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. 

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பா.ஜ.க. மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்தும் நட்டாவிடம் அண்ணாமலை விரிவாக எடுத்துரைத்ததாக தெரிகிறது. இதையடுத்து இன்று மாலையே தமிழகம் திரும்பும் அண்ணாமலை, வருகிற 28ஆம் தேதி "என் மண். என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்க இருப்பது தொடர்பாக ஆலோசிப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com