ஆர்டிஓ அலுவலகத்தில் பேட்டரி திருட்டு...!!!

ஆர்டிஓ அலுவலகத்தில் பேட்டரி திருட்டு...!!!

தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள வாகனங்களில் பேட்டரி திருடப்படுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

தஞ்சையில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக வந்த  ஐயப்பன் என்பவரின் லோடு ஆட்டோ முறையான ஆவணங்கள் இல்லை என பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து அபராதத்தை  செலுத்தி வாகனத்தை மீட்பதற்காக ஐயப்பன் வந்துள்ளார்.  அப்போது தனது வாகனத்தில் பேட்டரி மற்றும் ஸ்டெப்னி காணமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

பின்னர் இது குறித்து அதிகாரிகளிடம் ஐயப்பன் கேட்டபோது அதிகாரிகள் அலட்சியாமக பதிலளித்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இதையும் படிக்க:  பாதியில் நிறுத்தப்பட்ட விடுதலை திரைப்படம்