அண்ணன் மகனை வேலைக்கு போ கண்டித்த சித்தப்பாவை கல்லை போட்டு கொலை

அண்ணன் மகனை வேலைக்கு போ கண்டித்த சித்தப்பாவை கல்லை போட்டு  கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரம் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ். தற்போது இவர் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு தற்போது அவரது தாய் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது அண்ணன் மகன் நித்திஷ் குமார் அவரது தாயிடம் சண்டை போட்டுவிட்டு பாட்டி வீட்டில் ஆரோக்கியராஜுடன் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறார்.நித்திஷ் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவரது சித்தப்பா ஆரோக்கியராஜ் நித்திஷ்குமாரை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.மேலும், வேலைக்கு செல்லாவிட்டால் நிதீஷ்குமாரை அவரது சித்தப்பா ஆரோக்கியராஜ் வீட்டை விட்டு வெளியே போ என கூறி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நித்திஷ் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது சித்தப்பா ஆரோக்கியராஜ் நித்திஷ்குமாரை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து அவரிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நிதீஷ் குமார் நள்ளிரவு வீட்டுக்கு வந்துள்ளார்."வேலைக்கு போ"- கண்டித்த சித்தப்பா.. ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய அண்ணன் மகன் கைது !

அங்கு நிதீஷ் குமாரின் சித்தப்பா ஆரோக்கியராஜ் மது அருந்திவிட்டு தூங்கிகொண்டிருந்த நிலையில், அவர் வீட்டில் வைத்து இருந்த மீதி மதுவை குடித்துவிட்டு போதையில் இன்று அதிகாலை தனது சித்தப்பாவான ஆரோக்கியராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லைப் போட்டுள்ளார். இதில் ஆரோக்கியராஜ் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் படிக்க | முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வளர்த்து வந்த பெண் யானை உயிர்யிழப்பு!!!!

பின்னர் நிதீஷ் குமார் பெரியகுளம் காவல் நிலையம் சென்று தனது சித்தப்பாவின் தலையில் கல்லை போட்டு காயப்படுத்தி உள்ளேன் என பெரியகுளம் காவல் நிலையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார் . இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிஸார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயத்துடன் இருந்த ஆரோக்கியராஜை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆரோக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் நிதீஷ் குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.