
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இருசக்கரவாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, அவருடைய தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, அந்த தலையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை மதனப்பள்ளி புறநகர் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காட்டுப்பகுதியில் தலை இல்லாத உடல் ஒன்று கிடைப்பதையும், அதன் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்து கிடைப்பதையும் பார்த்தவிட்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காட்டுப்பகுதியில் கிடந்த உடலை கைப்பற்றி மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு, இருசக்கரவாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது . இதனையடுத்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.