சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு...சென்னை பிடித்த இடம் எது?

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு...சென்னை பிடித்த இடம் எது?

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியது. இதில், 87 புள்ளி 33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


CBSE  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ எக்கனாமிக்ஸ் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி மீண்டும் நடைபெற்றது.

இதையும் படிக்க : 69 வது பிறந்தநாளில் 69 கிலோ கேக் வெட்டிய எடப்பாடி...!

இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை, cbse.gov. in , results.nic.in, results.digilocker.gov.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவ-மாணவியர் தங்கள் பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்கின்றனர்.

அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 87 புள்ளி 33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 99 புள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.  பெங்களூரு மண்டலம் 98 புள்ளி 64 சதவீதம் தேர்ச்சி பெற்று 2-ம் இடத்தையும்,  97 புள்ளி 40 சதவீதம் தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.