"திமுகவின் ஊழலை மறைப்பதற்கே அமைச்சரவை மாற்றம்" ராஜன் செல்லப்பா..!!

"திமுகவின் ஊழலை மறைப்பதற்கே அமைச்சரவை மாற்றம்" ராஜன் செல்லப்பா..!!
Published on
Updated on
1 min read

அமைச்சரவையில் மாற்றம்  திமுக ஊழல் சக்கரத்தை மறைப்பதற்காகவே தவிர மக்களின் வளர்ச்சிக்காக இல்லை என திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா பேட்டிளத்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அமைச்சரவை மாற்றத்தால் ஊழல் செய்வது குறைந்துவிடாது, மாறிவிடாது, ஒருவர் உண்மை சொன்னார் என்பதற்கான மாற்றப்பட்டாரா? ஒருவர் திறம்பட செயல்படாமல் இருந்ததற்கு மாற்றப்பட்டாரா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். அமைச்சரவை கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம் மக்களின் வளர்ச்சிக்காக கிடையாது. திமுக ஊழல் சக்கரத்தை மறைப்பதற்காகவே தவிர மக்களின் வளர்ச்சிக்காக அமைச்சரவையில் மாற்றம் இல்லை" என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com