தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை  பதிவிறக்கம் செய்யலாம்...!!!

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை  பதிவிறக்கம் செய்யலாம்...!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வராக எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET- என்ற வாசகத்தினை Cick செய்தால் தோன்றும் பக்கத்திலுள்ள “SSLC PUBLIC EXAMINATION APRIL 2023 - HALL TICKET DOWNLOAD"என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 20.03. 2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. 

அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். 

உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  25% க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும்...!!