ரூ.2,000 வாபஸ்-க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ரூ.2,000 வாபஸ்-க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப் படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் வங்கி கணக்கில்லாத ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி நேற்று முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.Banks observe no rush for exchange or deposit of Rs 2,000 notes

இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபசை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு எதிராக டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போதுமான அறிவியல் பூர்வமான காரணங்களின்றி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றால் பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க:'2,000 ரூபாய் நோட்டு அறிவிப்பு' சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்!