அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி...மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு வருகை...!

அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி...மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு வருகை...!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு வருகை தந்தனர். 

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல், வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் ஈரோடு தொகுதியில் பணபட்டுவாடா உள்ளிட்ட எந்தவிதமான விதிமீறலும் நிகழாமல் இருக்க வேண்டி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு பணிகளை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.  

ஐந்து கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக  அனுப்பப்பட உள்ள நிலையில், ஒரு கம்பெனியில் 100 பேர் வீதம் சுமார் 200 பேர் முதற்கட்டமாக வருகை தந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட  32 வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com