தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....!!!

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....!!!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வெள்ளிக் கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

27 ஆம் தேதி  ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

28, 29, 30  ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் என்றும்  கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com