வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலார்ட்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் அலார்ட்!
Published on: 
Updated on: 
1 min read

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com