சந்திரயான்-3; நிலவில் இறங்கும் நேரம் மாற்றம்!

சந்திரயான்-3; நிலவில் இறங்கும் நேரம் மாற்றம்!
Published on
Updated on
1 min read

நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் நேரத்தை இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ மாற்றியமைத்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஜூன் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்தது. 

லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டது. 

இந்நிலையில், 23ம் தேதி 5 மணி 45 நிமிடத்திற்கு பதிலாக 6 மணி 4 நிமிடத்திற்கு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரலையில் இஸ்ரோவின் வலைதளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளப் பக்கங்களில் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com