கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் மாற்றம்?

கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் மாற்றம்?

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு தமிழகம, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதால் கே.எஸ்.அழகிரி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலம் மட்டுமே இருப்பதால், மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அப்படியே எதிர்மறையாக 2 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைத்திருக்கும் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க : அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ம்ற்றும் ஓபிஎஸ் சந்திப்பு?

இதன் ஒரு பகுதியாக, பாஜகவிற்கு டப் கொடுக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களின் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா , ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 5 ஆண்டுகளாக காங்கிரஸ் மாநில தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒருவேளை கே.ஏஸ்.அழகிரி மாற்றப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.