ஏமாற்றிய சிட் ஃபண்ட் நிறுவனம்... பணத்தை மீட்க கோரிக்கை!!

ஏமாற்றிய சிட் ஃபண்ட் நிறுவனம்... பணத்தை மீட்க கோரிக்கை!!

திருவண்ணாமலையில் V.R.S. சிட் பண்ட் நிறுவனத்தில் தாங்கள் கட்டிய பணத்தை விரைந்து பெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் V.R.S என்ற சீட் ஃபண்ட் நிறுவனம் இயங்கி வந்தது.  இந்த நிறுவனத்தின் சம்சுதீன் மற்றும் அவரது உறவினர்கள் நடத்தி வந்ததாக சொல்லப்படக்கூடிய நிலையில் அதன் கிளை அலுவலகங்களாக காஞ்சிபுரம் வந்தவாசி கீழ் கொடுங்கலூர் சாலவாக்கம் வாலாஜா மாம்பாக்கம் மானாமதி உத்திரமேரூர் மாங்கல் கூட்ரோடு மணப்பாக்கம் ஆரணி தெள்ளாறு வெம்பாக்கம் சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிறுவனத்தில் தீபாவளி சிப்பண்டு முதல் GROUP-A, GROUP-D, GROUP - F, GROUP - H, என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சொல்லப்படக்கூடிய நிலையில் இதன் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் உண்மையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்களா சொத்துக்கள் முடக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு இருக்கிறதா என பல்வேறு சந்தேகங்கள் பணம் கட்டியவர்கள் மத்தியில் எழுந்து வருவதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் தினந்தோறும் ஏஜென்ட்களின் வீடுகளை முற்றுகையிட்டு தொந்தரவு செய்வதாகவும் இதனால் இன்று திருவண்ணாமலையில் செயல்பட்டு வரக்கூடிய பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கின் தற்போதைய நிலவரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவதற்காக வந்திருந்ததாகவும் மேலும் வழக்கை விரைவாக முடிக்க குறையும் சொத்துக்களை முடக்கி பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கூறியும் ஏஜெண்டுகள் தரப்பில் மனு அளித்திருப்பதாக பணம் கட்டி ஏமாந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிட் பண்டு நடத்தி பொது மக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டவர்களை விரைவாக கைது செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிக்க:   வடமாடு ஜல்லிக்கட்டு .... கண்டுகளித்த மக்கள்..!!