"ஆளுநர் அதிகாரத்தில் முதலமைச்சர் இரட்டை நிலைப்பாடு" அண்ணாமலை விமர்சனம்!

"ஆளுநர் அதிகாரத்தில் முதலமைச்சர் இரட்டை நிலைப்பாடு" அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் கவர்னரின் அதிகாரம் பற்றிய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டு உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை  பேட்டியளித்துள்ளார்.

இன்று சென்னை  விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது கவர்னரின் அதிகாரம் பற்றிய விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, "தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது டுவிட்டரில் இரண்டு கருத்துகளை பதிவு செய்திருந்தார். அதில் அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரை ஊழல் காரணம் காட்டி உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அப்போதைய ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார். ஆனால் தற்பொழுது சட்ட விரோத பணபரிமாற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார். இது அவனது இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது என தெரிவித்தார்.  

மேலும் நேற்று கவர்னர் செந்தில் பாலாஜியை நீக்கி வெளிட்ட உத்தரவு தெளிவாக இருப்பாகவும் அவ்வுத்தரவில் உச்சநீதிமன்றமே செந்தில் பாலாஜி ஊழல் செய்து இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:நள்ளிரவில் வாபஸ்...அந்தர் பல்டி அடுத்த ஆளுநர்...!