கேரளா செல்கிறார் முதலமைச்சர்...!!

கேரளா செல்கிறார் முதலமைச்சர்...!!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறாா். 

கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்வை அம்மாநில அரசு பிரம்மாண்டமான முறையில் இன்று கொண்டாடுகிறது.  இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.  அதன்படி அவா் இன்று காலை 7.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கேரளா கொச்சிக்கு செல்கிறார்.  

அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாளை காலை 11 மணிக்கு கொச்சியில் இருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  நீர்த் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம்....!!!