அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்...!!

அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்...!!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  உலக தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தும் வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும்  தாய்மையைப் போற்றும் நாளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  தாய்மை எனும் பெருங்குணத்தோடு காட்டுகிற  அன்பு , எதிர்பார்ப்பு இல்லாத அன்பும், பாசாங்கு இல்லாத பாசமும் கொண்டதுதான் தாய்மை.  அத்தகைய தாய்மையை இன்று பலரும் போற்றி புகழ்ந்து வருகின்றனர். 

அதன்படி முதலமைச்சர் முக.ஸ்டாலின் “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என அன்னையர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட தங்க நகைகள்...!!