முறையான சிகிச்சை இல்லாததால் தான் குழந்தை இறந்தது - அரசு மருத்துவமனை முன் ஆர்பாட்டம்...

அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்து பிரிவில் முறையான  சிகிச்சை அளிக்காததால்  ஆண் குழந்தை இறந்தாக கூறி உறவினர்கள் ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முறையான சிகிச்சை இல்லாததால் தான் குழந்தை இறந்தது - அரசு மருத்துவமனை முன் ஆர்பாட்டம்...
Published on
Updated on
1 min read

சென்னை : குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் திருநீர்மலை இரட்டை மலை சீனிவாசன் தெருவில் வசிப்பவர் ஆனந்தி என்கின்ற ஆஷா. இவர் குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவனையில் மகப்பேறு மருதுவமனை பிரிவில் கடந்த திங்கட்கிழமைகாலை சேர்த்துள்ளனர். இந்நிலையில் புதன் கிழமை காலை 10:57 மணிக்கு அறுவைசிக்கிச்சை முலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தையை இங்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்த நிலையில் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால், நேற்று இரவு குழந்தை அசைவு இல்லாததை கவனித்த மருத்துவர்கள் குழந்தையின் தந்தைக்கு தகவல் அளித்தனர்மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது குழந்தை இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், மருத்துவர்கள் மகப்பேறு பிரிவில் கவன குறைவாக   இருப்பதால்தான் குழந்தை இறந்தது என குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துமனை முன்பு முற்றுகையில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த போலிசார் உறவினர்களிம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் .

அரசு மருத்துவ மனை பணியாளர்களுக்கும் குழந்தையின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் பகுதி பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது மேலும்  அரசு மருத்துவமனை நிர்வாகிகளிடம் குரோம்பேட்டை காவல்துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com