சீன பிளாஸ்டிக் லைட்டரை அரசு தடை செய்யுமா...? அமைச்சர் தா.மோ அன்பரசன் பதில்!

சீன பிளாஸ்டிக் லைட்டரை அரசு தடை செய்யுமா...? அமைச்சர் தா.மோ அன்பரசன் பதில்!
Published on
Updated on
1 min read

சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். 


சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகவும், வருடம் ஒன்றிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு தீப்பெட்டி விற்பனையாகிறது என்றும், விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு  வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், சீன பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த விலையில் 20 தீப்பெட்டி உடைய அளவில் இந்த லைட்டர் வந்துள்ளதால் மொத்தமாக 20% அளவிற்கு ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் தொடர்ச்சியாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர்,  தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என உறுதிப்பட தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com