10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...வெளியாகும் தேதியில் அதிரடி மாற்றம்!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...வெளியாகும் தேதியில் அதிரடி மாற்றம்!

10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இதையும் படிக்க : கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர் அதிரடி!

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, வருகின்ற மே 19 ஆம் தேதி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் www. tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து மாணவர்கள் தங்கள் முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்