முறையாக வானிலை எச்சரிக்கையை அறிவிக்க தவறும் தூத்துக்குடி மீன் வளத்துறை அதிகாரிகள்!!

முறையாக வானிலை எச்சரிக்கையை அறிவிக்க தவறும் தூத்துக்குடி மீன் வளத்துறை அதிகாரிகள்!!

தூத்துக்குடி மீன் வளத்துறை அதிகாரிகள் வானிலை எச்சரிக்கையை முறையாக அறிவிப்பதில்லை என மீனவ மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து விசைப்படகு தொழிலாளர் சங்கப் பிரதிநிதி ஜவகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியப்போது தங்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை முறையாக வழங்குவதில்லை என தொழிலாளர்கள் வருத்தமுடன் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் மீனவர்களுக்கு  விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கையின் நகல்கள் தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்கப்பட்டதை மீன்வளத்துறை அதிகாரி தவறு என்று குறிப்பிட்டு எங்கள் மீது வழக்கு போடப்படும் என எச்சரிக்கிறார் எனவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

இதைனை வன்மையாக கண்டிப்பதாகவும், தற்போது வந்துள்ள மீன்வளத்துறை அதிகாரியை, தொழிலாளர் பிரதிநிதிகள் பல மணி நேரம் காத்து கிடந்து தான் சந்திக்கும் சூழல் உள்ளது. 6 தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் வாங்கும் வரை விசைப்படகு தொழிலாளர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என விசைப்படகு தொழிலாளர் சங்கப் பிரதிநிதி ஜவகர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com